Showing posts with label tamil. Show all posts
Showing posts with label tamil. Show all posts

Thursday, September 9, 2010

Interesting Facts About Tamilnadu

  • Chennai shares the second position as the largest employment generator in India, along with Bombay. The first position is Bangalore.
  • Chennai generates around 35,000 jobs annually. 
  • Chennai has the highest two-wheeler population in India. 
  • Chennai has the lowest pollution among major cities of India in spite of having over 20 lakh vehicles. 
  • The city is now called the Detroit of India due to its automobile industry producing over 40% of the country's auto parts and vehicles.
  • Chennai is India’s fourth largest city and ranks among the fifty most populous cities in the world (#35). 
  • Chennai as ranked First in India in Health facilities by Outlook in 2003.
  • Chennai was ranked First in India in Education facilities by Outlook in 2003. 
  • Chennai was ranked the second best city to live in by Outlook in 2003. 
  • The Mofussil bus stand at Koyambedu, Chennai is the largest in South Asia.
  • The only state seen many Chief Ministers from Film Industry or People associated to Film industry. (M.G.R, Jayalalitha, V.N.Janaki, Annadurai, & Karunanidhi. The first three people acted in films, the later two were associated with film industry by story & dialogue writing.)
  • Chennai is the best place of cinema post-production work in the country according to leading cine industry experts. Because of its cheapness and all modernized technologies, several post-production works for the movies from the Eastern India and also from North-East India are now being done in Chennai. 
  • Madras (Chennai) old facts........... Gateway of South India . Cultural capital of India .
  • Marina Beach is the second longest beach in the world, after Copacabana Beach in Rio de Janeiro. 
  • Has one of oldest engineering and medical colleges in the world. 
  • Has the second largest cine industry in the country, next only to Bombay. 
  • Chennai is the home of South Indian cinema. There were times when all the post production work in the entire South Indian cine industry was done only at Chennai. 
  • The Vandalur Zoo in Chennai is the First Zoo (1855) in India and one of the largest in South Asia. 
  • The Cancer institute (1920) in Chennai is one of the Oldest in India
  • The Cooum River running across Chennai was being used for water transportation in its earlier days.
  • Chennai’s Mount Road or Anna Salai’s original name is GST Road (Grand South Trunk Road)

Tuesday, September 7, 2010

Tamil satellite channel – Free and Live Tamil Chennels

Generally Live TVsare not in India Time. Either US or Europe timing only they are available.

Free Username and Password Account for IsaiTamil:

UserID: isaitamil.net
Pwd: isaitamil.com

Live TV Links: 

Sun TV
http://www.isaitamil.net/Sun_europe
 
Sun TV -
http://www.isaitamil.net/SunTv
 

Vijay TV -
http://isaitamil.net/isaitamil.net_vijaytv
 
Jaya TV -
http://www.techsatish.tv/2007/06/jaja-tv-india.html
 
K TV
http://www.techsatish.tv/2007/04/ktv-india.html
 
Raj Digital TV
http://www.techsatish.tv/2007/05/raj-digital-india.html
 
Raj TV
http://www.techsatish.tv/2007/05/raj-tv-india.html
 

Thursday, September 2, 2010

கடவுளின் குழந்தைகள்...!!!

அனாதைகள்
கடவுளின் குழந்தைகள்
என்றால்...,
கடவுளுக்கும் கட்டாயம்
தேவை தான்
குடும்ப கட்டுப்பாடு....!!!!

பத்மஸ்ரீ டாக்டர் -கமலஹாசன்-

Tuesday, August 24, 2010

போராடி வீரச் சாவைக் தழுவிக்கொண்ட ஒரு பூச்சியின் வீரகாவியம்

இங்கு நாம் காண்பது ஒரு ஆண்மையுள்ள பூச்சி எப்படி ஒரு நாயுடன் போராடுகிறது என்பதே. இது போன்ற நிகழ்சிகள் எப்பொழுதாவது தான் நடைபெறும்.
ஒரு நாள் அந்த பூச்சி தனது வழியில் சென்று கொண்டுஇருக்கும் பொழுது எதிரே வந்தா நாய் குட்டி அதனை பார்த்து விட்டது. ஆனால் அந்த பூச்சியோ எந்த தொந்தரவும் செய்யாமல் தனது வழியிலேயே செல்ல நினைக்கிறது, குட்டி நாயே அதனை வம்புக்கு இழுக்கிறது, ஆனால் அந்த பூச்சி அதை சட்டைசெய்யாமல் தனது வழியே செல்ல நினைக்கிறது.
மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யும் நாய்க்குட்டியை எதிர்த்து போராட நினைத்து, அதில் இறங்கவும் தயாராகிறது. மிகவும் வீரமாக போராடிய பூச்சியை நாய் குட்டியோ சர்வ சாதரணமாக சமாளித்து விடுகிறது.
சிறிது நேரம் சென்றதும் நாய் குட்டி அதனை தாக்குகிறது, தாக்குதல் முடிந்ததும் அந்த பூச்சியை உணவாக உட்கொள்கிறது.
அந்த சிறிய பூச்சிக்கு இருக்கும் போராடும் குணம் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. இதை தமிழர்கள் ஆகிய நாம் ஒருபாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

Thursday, August 12, 2010

க‌தைய‌ல்ல‌...எச்ச‌ரிக்கை!



அவ‌னுக்கு வ‌ய‌து 22. மாநிற‌ம். . அதிர்ந்து பேச‌மாட்டான். மிக‌ அமைதியான‌வ‌ன்.

சொந்த‌ ஊர் என்ன‌வோ திருவ‌ண்ணாம‌லைதான். ஆனால் வ‌சிப்ப‌து வ‌றுமைக்கோட்டுக்கு கீழே‌. அவ‌னுடைய‌ த‌ந்தை. தேர்ந்த‌ நெச‌வாளி. அவ‌ருக்கு உத‌வியாய் அவ‌ன‌து அம்மா. க‌ல்லூரி செல்லும் வ‌ய‌தில் ஒரு த‌ங்கை.

அவ‌னுடைய‌ த‌ந்தை என்ன‌மோ ஸ்ரீபெரும்புதூர் ஜாம்ப‌வான்க‌ளுக்கு அடிப‌ணியாத‌வ‌ர்தான். ஆனால் அவ‌ன் ப‌ணிந்துபோக‌ த‌யாராக‌யிருந்தான். வ‌றுமைக்கோடு. எப்பாடுப‌ட்டேனும் இந்த‌ கோட்டிலிருந்து வில‌கி த‌ன் குடும்ப‌த்தை ஒரு ந‌ல்ல‌ நிலைமைக்குக் கொண்டுவ‌ந்துவிட‌ வேண்டும் என்கிற‌ வெறி.

பெரும் முய‌ற்சிக்குப் பின்ன‌ர், துபாயில் ஒரு ப‌ன்னாட்டு நிறுவ‌ன‌த்தில் அவ‌னுக்கு வேலை கிடைத்த‌து. மாத‌ச் ச‌ம்ப‌ள‌ம் ரூ.10000.

பிற‌ந்த‌து முத‌ல், அதிக‌ப‌ட்ச‌ம் இர‌ண்டு நாட்க‌ளுக்கு மேல் த‌ன் பெற்றோரை பிரிந்த‌தில்லை அவ‌ன். ப‌ணியில் சேர்ந்த‌ பின் 2 வருடத்துக்கு ஒரு முறைதான் வீட்டுக்குப் போக‌ முடிந்த‌து. இந்த‌ பிரிவு அவ‌னை வ‌ருத்த‌ம‌டைய‌ச் செய்தாலும், த‌ன் குடும்ப‌ம் ந‌ல்ல‌ பொருளாதார‌ நிலைமைக்கு உய‌ர‌ இது அவ‌சிய‌ம் என்று க‌ருதி த‌ன்னைத் தானே தேற்றிக்கொண்டான்.

ப‌ண‌ம்..ப‌ண‌ம்..ப‌ண‌ம்..இது ஒன்றே முக்கிய‌ம். குடும்ப‌த்தின் வ‌றுமை ஒழிய‌ த‌ன் க‌வ‌ன‌ம் முழுதும் ப‌ண‌ம் ச‌ம்பாதிப்ப‌திலேயே இருக்க‌ வேண்டும் என்ப‌து அவ‌னுடைய‌ ல‌ட்சிய‌ம், வெறி, சித்தாந்த‌ம், கொள்கை, கோட்பாடு எல்லாமே. காலை 6:30 ம‌ணிக்கு அவ‌னுடைய‌ ஷிஃப்ட் துவ‌ங்கும். ஆறு ம‌ணிக்கு முன்னே அலுவ‌ல‌க‌த்துக்குச் சென்றுவிடுவான்.

அன்று திங்க‌ள் கிழ‌மை. ப‌னி வில‌காத‌ காலை நேர‌ம். ஆறாவ‌து த‌ள‌த்தில் உள்ள‌து அலுவ‌ல‌க‌ம். த‌ரைத் த‌ள‌த்தில் லிஃப்ட்டினுள் நுழைந்து 6ஐ அழுத்தினான். ஆறாம் த‌ள‌ம் சென்ற‌டைந்த‌வுட‌ன் லிஃப்ட் க‌த‌வு திற‌ந்த‌போது கீழே விழுந்த‌து அவ‌னுடைய‌ உயிர‌ற்ற‌ உட‌ல்!





அங்கிருந்த‌ செக்யூரிட்டிக‌ள் அவ‌னுடைய‌ டீமுக்கு த‌க‌வ‌ல் அளித்து அவ‌னை ம‌ருத்துவ‌ம‌னைக்குக் கொண்டு செல்ல‌ ஏற்பாடு செய்த‌ன‌ர். ம‌ருத்துவ‌ம‌னையில் ப‌ரிசோதித்த‌ ம‌ருத்துவ‌ர் ம‌றுநொடியே சொன்னார், "ஸாரி ஹி ஈஸ் நோ மோர்". 'டெட் ஆன் அரைவ‌ல்' என்று ரிப்போர்ட்டில் ப‌திவு செய்தார்.

பின்ன‌ர் அவ‌னுக்கு நெருங்கிய‌ ந‌ண்ப‌ர்க‌ளிட‌ம் விசாரித்த‌போது தெரிய‌வ‌ந்த‌து. அவ‌னுக்கு புகை, குடி என்று எந்த‌ ப‌ழ‌க்க‌மும் இல்லை. ஒவ்வொரு மாத‌மும் அவ‌னுக்கென்று ரூ.3000 எடுத்துக்கொண்டு மீதி ப‌ண‌த்தை த‌ன் குடும்ப‌த்துக்கு அனுப்பிவிடுவான். அந்த‌ 3500ல் போக்குவ‌ர‌த்து, அலைபேசி, உண‌வு ஆகிய‌வ‌ற்றிற்கான‌ செல‌வுக‌ள் அட‌ங்கும். செல‌வைக் க‌ட்டுப்ப‌டுத்த‌ அவ‌ன் மேற்கொண்ட‌ ஒரு முடிவு..தினமும் காலை உண‌வைத் த‌விர்த்து ஒரு நாளைக்கு இரு வேளை ம‌ட்டுமே உண்ணுவ‌து.

இந்த‌ ப‌ழ‌க்க‌ம் வெகு நாட்க‌ளாய்த் தொட‌ர்ந்து உட‌லுக்குள் வாயு உருவாகி அது இத‌ய‌த்திற்குச் செல்லும் குழாயை பாதித்து......22 வ‌ய‌தில் மார‌டைப்பு! இது ஏதோ க‌ற்ப‌னையாக‌ எழுத‌ப்ப‌ட்ட‌ வ‌ரி அல்ல‌. அவ‌னுடைய‌ உண‌வு ப‌ழ‌க்க‌த்தை அவ‌ன் ந‌ண்ப‌ர்க‌ள் கூற‌க்கேட்டு அறிந்த‌ பின் ம‌ருத்துவ‌ர் சொன்ன‌து.

ப‌ண‌ம் ஒன்றையே பிராத‌ன‌மாக‌க் க‌ருதி ப‌ர‌ப‌ர‌வென‌ ப‌ற‌ந்துகொண்டிருக்கும் இந்த‌ யுக‌த்தில், ந‌ம்மில் பெரும்பாலானோர் காலை உண‌வைத் த‌விர்த்துவிடுகிறோம்/குறைத்துவிடுகிறோம். பெரும்பாலும் நாம் சொல்லும் கார‌ண‌ம்.."டைம் இல்ல‌". சாப்பிடுவ‌த‌ற்குக் கூட‌ நேர‌மில்லாம‌ல் அப்ப‌டி என்ன‌ கிழித்துவிட‌ப் போகிறோம்?

இத‌ற்கு மேல் இதைப்ப‌ற்றி நீங்க‌ளே சொல்லுங்க‌ள்!

பி.கு: நானும் இந்த‌ ம‌ட‌த்த‌ன‌மான‌ கார‌ண‌த்தைக் காட்டி ப‌ல‌ நாட்க‌ள் காலை உண‌வைத் த‌விர்த்திருக்கிறேன். அவ‌ன் ம‌ர‌ண‌ம்...என‌க்கொரு பாட‌ம். அன்றிலிருந்து என்னுடைய‌ காலை உண‌வு நேர‌ம் 8 அல்ல‌து 8:30க்குள்.

ஏழைச் சிறுவன் கையில்

ஏழு வண்ணத்தில் எண்ணிக் கோர்த்து
ஏழைகள் பார்வை உடுத்தும் - பட்டாடை;
வானவில்!

வளைந்த புருவத்தில் பூமிக் காதலிக்கு

வானம் காட்டும் வர்ண ஜாலம்
வானவில்!

கல்வியறிவை கடன் வாங்காது

இயற்கை நெய்த கணினி வித்தை;
வானவில்!

ஏற்றத் தாழ்வுகளின் ஏணி மிதித்து

உலகின் பார்வைக்காய் பூட்டிவைத்த
வான தேவதையின் வண்ண மாலை;
வானவில்!

காற்றில் மழையில்

கரைந்திடாத கலைந்திடாத
மேகப் பூக்களின் விளம்பரப் பலகை;
வானவில்!

இயற்கையின் இயக்கத்திற்கு முகவரி கொடுத்த -

கடவுளின் பெயரெழுதிடாத மவுனத்தின்
வானம் தீட்டிய வண்ண மொழியாக்கம்
வானவில்!

பூமிக்கு வரும் மழை விருந்தாளிக்கு

தன் மேக கழுத்தில் -
வானம் கட்டிய ஆபரணம்
வானவில்!

திக்கிரண்டுமாய் நீண்டு வளைந்த

தென்றல் பெண்ணின் ஆடை அலங்காரம்
வானவில்!

வானவில்லுக்காய்

வார மாத தவம் போல் காத்திருந்து -
வெளிவராத மங்கை;
வானவில்!

என்றேனும் எட்டி வானம் பார்க்கையில்

அதிசயம் பூத்து போன - பூஞ்சரமாய்
சுட்டிக் காட்டும் விரல்நுனியில் - உதடு சுழித்து
முத்தமிட்ட வண்ணப் பெண்ணவள் வானவில்! வானவில்!

அன்பான அன்னை

மறுபிறவி
இருந்தால்
செருப்பாக பிறக்க
வேண்டும்...
அவள்
காலில் மிதி பட அல்ல...
என்னை
சுமந்த அவளை
ஒரு முறை நான்
சுமபதர்காக.........

நீயே ஒரு கவிதை - அம்மா

அம்மாவை பற்றி கவிதையா
நிச்சயமாக முடியாது என்னால்
காதலியை பற்றி எழுத ஒரு
காகிதமும் சில பொய்களும் போதும்
அம்மா உன்னை பற்றி எழுத
உலகத்தில் உள்ள அணைத்து காகிதங்களும் பத்தாது
என்னை பொறுத்தவரை கடவுளை நான் நம்ப காரணமே
எதை எதையோ படைத்த அவன்
அம்மாவையும் படைததர்க்காகதான்
அம்மா
நான் சொன்ன முதல் வார்த்தை
எல்லோரும் சொல்லும் முதல் வார்த்தை 

..மா அம்மா நாங்கள் அன்றே சொன்ன முதல் கவிதை அம்மா..!

கவிதை : அம்மா


















அம்மா.
உன்னை உச்சரிக்கும் போதெல்லாம்
எனக்குள்
நேசநதி
அருவியாய் அவதாரமெடுக்கிறது.
மழலைப் பருவத்தின்
விளையாட்டுக் காயங்களுக்காய்
விழிகளில் விளக்கெரித்து
என்
படுக்கைக்குக் காவலிருந்தாய்.
பசி என்னும் வார்த்தை கூட
நான் கேட்டதில்லை
நீ
பசியை உண்டு வாழ்ந்திருக்கிறாய் .
என் புத்தகச் சுமை
முதுகை அழுத்தி அழுதபோது
செருப்பில்லாத பாதங்களேடு
இடுப்பில் என்னை
இரண்டரை மைல் சுமந்திருக்கிறாய்.
அகரம் அறிமுகமான ஆரம்ப நாட்களில்
அன்பின் அகராதியை எனக்கு
அறிமுகப் படுத்தியது
என் தலை கோதிய உன் விரல்களல்லவா ?
எனது சிறு சிறு வெற்றிகளுக்கு
கோப்பைகள் கொடுத்தது
உனது
இதயத் தழுவலும்
பெருமைப் புன்னகையுமல்லவா ?
வேலை தேடும் வேட்டையில்
நகர நெரிசல்களில் கீறல் பட்ட போது
ஆறுதல் கரமானது
உனது ஆறுவரிக் கடிதமல்லவா ?
எனக்கு வேலை கிடைத்தபோது
நான் வெறுமனே மகிழ்ந்தேன்
நீதானே அம்மா
புதிதாய்ப் பிறந்தாய் ?
உனக்கு முதல் சம்பளத்தில்
வாங்கித்தந்த ஒரு புடவையை
விழிகளின் ஈரம் மறைக்க
கண்களில் ஒற்றிக் கொண்டாயே
நினைவிருக்கிறதா ?
இப்போதெல்லாம்
என் கடிதம் காத்து
தொலை பேசியின் ஒலிகாத்து
வாரமிருமுறை
போதிமரப் புத்தனாகிறாய்
வீட்டுத் திண்ணையில்.
எனக்கும்
உன் அருகாமை இல்லாதபோது
காற்றில்லா ஓர் வேற்றுக் கிரகத்துள்
நுழைந்த வெறுமை.
போலியில்லா உன்முகம் பார்த்து
உன் மடியில் தலைசாய்த்து
என் தலை கோதும் விரல்களோடு
வாழத்தான் பிடித்திருக்கிறது எனக்கும்
இந்த
வாழ்க்கை நிர்ப்பந்தங்கள் தான்
வலுக்கட்டாயமாய்
என் சிறகுகளைப் பிடுங்கி
வெள்ளையடிக்கின்றன.

Thursday, August 5, 2010

மனதைத் தொட்ட வரிகள் !!!

Ø பணத்திற்காக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டாம். பணம் குறைந்த வட்டிக்கு வெளியே கிடைக்கும் - ஸ்காட்லாந்து பொன்மொழி

Ø துன்பம் துன்பம் என்று சலித்துக் கொண்டு என்ன பயன்? உடம்பிலிருக்கும் ஒன்பது ஓட்டைகளோடு அதுவும் பத்தாவது ஓட்டை என்று முடிவு கட்டு : வாழ்வுக்கு நியாமும், நெஞ்சிற்கு நிம்மதியும் கிடைக்கும். - கவியரசு கண்ணதாசன்

Ø உழைப்பு வறுமையை மட்டும் விரட்டவில்லை; தீமையையும் விரட்டுகிறது.
- வால்டேர்

Ø அழகான பெண், கண்களுக்கு ஆனந்தமளிக்கிறாள். குணமான பெண் இதயத்திற்கு குதூகலமளிக்கிறாள். முதலாமவள் ஒரு ஆபரணம், இரண்டாமவள் ஒரு புதையல் - நெப்போலியன்

Ø ஒரு தாய் தன் மகனை மனிதனாக்க இருபது வருடங்களாகிறது. அவனை மற்றொரு பெண் இருபதே நிமிடங்களில் முட்டாளாக்கிவிடுகிறாள். - ஆஸ்கார் ஒயில்ட்

Ø பெண்களில் இரண்டே பிரிவினர் தாம் இருக்கிறார்கள். ஒன்று அழகானவர்கள். மற்றொன்று அழகானவர்கள் என்று நம்பிக் கொண்டிருப்பவர்கள் - பெர்னாட்ஷா

Ø அழகான பெண்களுக்குப் பிறக்கும்போதே நிச்சய தார்த்தம் நடந்து விடுகிறது. - ஹாபர்ட்.

Ø பெண் இல்லாத வீடும், வீடு இல்லாத பெண்ணும் மதிப்பு இல்லாதவை! - பாலஸ்தீனப் பழமொழி

Ø ஒரு தகப்பனார் பத்துக் குழந்தைகளைக் காப்பாற்றலாம். ஆனால் பத்துக் குழந்தைகள் ஒரு தகப்பனாரைக் காப்பாற்றும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. - ப்ரெட்ரிக் நீட்சே

Ø நீங்கள் போருக்குச் செல்லும்போது ஒரு தடவை பிரார்த்தனை செய்யுங்கள். கடல் பயணத்திற்குச் செல்லும்போது இரண்டு தடவை பிரார்த்தனை செய்யுங்கள் ஒரு பெண்ணை மனைவியாக ஏற்கும் போது மூன்று தடவை பிரார்த்தனை செய்யுங்கள். - வின்ஸ்டர் லூயிஸ்

Ø தெரிந்து மிதித்தாலும் தெரியாமல் மிதித்தாலும் மிதிபட்ட எறுப்பிற்கு இரண்டுமே ஒன்றுதான்

Ø குத்து விளக்கு எவ்வளவு பிரகாசமாக எரிந்தாலும் அதன் அடியில் சற்று இருள் இருக்கத்தான் செய்யும்

Ø சுயநலம் என்பது சிறு உலகம். அதில் ஒரே ஒரு மனிதன்தான் வாழ்கிறான்

Ø வெற்றியின் ரகசியம் - எடுத்த கரியத்தில் நிலையாக இருத்தல்

Ø பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம்
இல்லாவிட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது.

Ø மது உள்ளே சென்றால் அறிவு வெளி செல்கிறது நண்பனைப் பற்றி நல்லது பேசு. விரோதியைப் பற்றி ஒன்றும் பேசாதே!

Ø அதிர்ஷ்டத்திற்காகக் காத்திருப்பதும் சாவுக்காக் காத்திருப்பதும் ஒன்றே!


Ø செல்வம் என்பது பணம் மட்டும்தான் என்பது இல்லை

Ø நாக்கு கொடிய மிருகம். அதை எப்போதும் கட்டியே வை!

Ø பறக்க விரும்புபவனால் படர முடியாது.

Ø மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை அல்ல, தடைகளை வெற்றி கொண்டு வாழும் வாழக்கை.

Ø ஒரு கதவு மூடப்படும் போது மற்றொரு கதவு திறக்கிறது. ஆனால், நாம் மூடப்பட்ட கதவையே பார்த்துக்கொண்டு திறக்கப்படும் கதவை தவறவிடுகிறோம்.

Related Post